செய்திகள்

தேசிய அரசின் செயற்பாடுகளை பொறுத்திருந்து பார்ப்போம்: மகிந்த ராஜபக்‌ஷ

புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்சக்காலத்தில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி தாம் பேசிய போது, அதனை சிலர் எள்ளி நகையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறை தெலிஜ்ஜிவல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் புதிய தேசிய அரசாங்கத்துக்கு தான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.