செய்திகள்

தேசிய அரசு அமைகிறது: ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 உறுப்பினர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாகவும், இராஜாங்க அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் இன்று மாலை புதிதாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் பிரதி அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்குடனேயே இவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு நாட்களாக நடத்திய பேச்சுக்கனையடுத்தே தேசிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் விபரம்:

01. ஏ.எச்.எம்.பெளசி – அனர்த்த முகாமைத்துவம்

02. எஸ்.பி.நவீன் – தொழில் மற்றும் தொழில் உறவுகள்

03. பியசேன கமகே – திட்ட முகாமைததுவ திறன் அபிவிருத்தி

04. சரத் அமுனுகம – ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி

05. எஸ்.பி.திஸநாயக்க – கிராமிய பொருளாதார அபிவிருத்தி

06. ஜனக பண்டார தென்னக்கோன் – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்

07. பீலிக்ஸ் பெரேரா – விசேட திட்டங்கள்

08. மஹிந்த யாப்பா – நாடாளுமன்ற அலுவல்கள்

09. றெஜினோல்ட் கூரே – சிவில் விமானப் போக்குவரத்து

10. விஜிதமுனி சொய்சா – நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம்
11. மஹிந்த அமரவீர – கடற்றொழில் மற்றும் நீரியல் வளம்.