செய்திகள்

தேசிய ஐக்கியத்திற்கான செயலகத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

தேசிய ஐக்கியத்திற்கான செயலகமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார்.

சகல பிரஜைகளுக்கும் சமூக , பொருளாதார , கலாச்சார மற்றும் அரசியல் பிரிவினைகள் இன்றி ஐக்கியத்துடன் வாழும் வகையிலும் மற்றும் எந்த வொரு பிரிவினரும் பிரதான பிரிவு என்ற வரையறையின்றி செய்றபடும் மக்களை உருவாக்கும் நோக்கிலும் இந்த செயலகம் அமைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கமையவே இந்த செயலகம் அமைக்கப்படவுள்ளதுடன் இதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.