செய்திகள்

தேசிய திரைப்பட விருது அறிவிப்பு: தமிழுக்கு எட்டு விருதுகள்!

62-வது தேசிய திரைப்பட  விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவுக்கு எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகையாக, கங்கனா ரனவ்த்தும்  சிறந்த  நடிகராக கன்னட நடிகர் விஜயும் தேர்வாகியுள்ளார்.

இந்திய அளவில் சினிமா துறைக்கான தேசிய விருதை மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. சிறந்தப் படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்கம், ஒளிப்பதிவு என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறன. கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை வெளியான திரைப் படங்களுக்கான விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் குயின் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, கங்கனா ரனவ்த் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகராக, ‘நானு அவனல்ல அவளு’ என்ற கன்னடப் படத்தில் நடித்த விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
queen-1

bestactovijay
தமிழுக்கு எட்டு விருதுகள் கிடைத்துள்ளன. பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா) சிறந்த துணை நடிகராகவும், விவேக் ஹர்சன் (ஜிகிர்தண்டா) சிறந்த எடிட்டராகவும் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு நா.முத்துக்குமாரும் இந்தப் பாடலை பாடிய உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்த பாடகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

bobby-simha

index

மேலும் சிறுவர்களுக்கான படமாக, மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டையும் அதில் நடித்த விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வாகி உள்ளனர். தமிழில் சிறந்த படமாக, குற்றம் கடிதல் தேர்வாகி உள்ளது. UDV தனஞ்செயன் எழுதிய பிரைட் ஆஃப் தமிழ் சினிமா’ சிறந்த சினிமா நூலுக்கான விருதை பெற்றுள்ளது. இந்தஇ 62-வது தேசிய திரைப்பட விருதுகளின் தேர்வுக் குழுவுக்கு இயக்குனர் பாரதிராஜா தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் 3ம் தேதி, டெல்லி விக்யான் பவனில் நடிக்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த விருதுகளை வழங்க இருக்கிறார்.

kakka-muttai-movie-poster