செய்திகள்

தேசிய நிறைவேற்று சபையின் காலம் முடிந்தது அதனை உடனடியாக கலைக்க வேண்டும் : ஜே.வி.பி

தேசிய நிறைவேற்று சபையின் சகல பணிகளும் முடிவடைந்துள்ளதாகவும் இனியும் அந்த சபையை  தொடர்ந்து கொண்டு செல்லாது அதனை  உடனடியாக கலைக்குமாறு ஜே.வி.பி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நல்லாட்சிக்கான வேலைத்திட்டஙகளை கண்கானிக்கும் வகையிலும் மற்றும்  அரசியலமைப்பு திருத்தம் , சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளும் வகையில் 100 நாட்களுக்கென்றே தேசிய நிறைவேற்று சபை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 100 நாள் முடிவடைந்துள்ளதுடன்  அந்த சபையின் சகல பணிகளும் முடிவடைந்துள்ளன. ஆகவே தொடர்ந்தும் இதனை தொடருவது அர்த்தமற்றது. ஆகவே இதனை உடனடியாக கலைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.