செய்திகள்

தேசிய பாதுகாப்பில் மட்டுமன்றி பிராந்திய பாதுகாப்பிலும் இலங்கை கவனம் செலுத்துகின்றது : ஜனாதிபதி

தேசிய பாதுகாப்பில் மட்டுமன்றி பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன .கொள்கை அடிப்படையில் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையால்  ஒரு நாட்டில் உறவு மற்றொரு நாட்டின் மீது எந்த பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் மாபெரும் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகள் தொடர்பாக அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளுக்கு ஜெர்மன் பாராளுமன்ற குழுவினரிடம் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார்
இதேவேளை ஜேர்மன் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு தேவையான உதவிகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்டபோது தொழில்நுட்பபயிற்சி , நீர் சுத்திகரிப்பு மற்றும்  சிறுநீரக நோயை தடுக்க உதவிகள் தேவையாகவுள்ளதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

n10