செய்திகள்

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்: ஜனாதிபதி

நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு புதிய அரசு என்ற வகையில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான பல நடவடிக்கைகளை கடந்த மூன்று மாதங்களில் அரசு எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய பாதுகாப்புத் தொடர்பாக தமது பொறுப்பையும் வகைப்பொறுப்பையும் அனைவரும் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
02
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய ஆய்வின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கண்டுபிடிப்புகளுடன் எமது படைவீரர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளும்பொருட்டு உரிய பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு கடந்த நாட்களில் நாம் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்களின்போதும் இந்நாட்டுக்கு அரச தலைவர்கள் வருகை தந்தபோதும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
01
மூன்று தசாப்தங்களாக நாட்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்கிய கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை நிறைவு செய்த எமது வீரமிகு படைவீரர்கள் இன்று மானிட சமுதாயத்திற்காக ஆற்றுகின்ற விரிவான சேவையையும் பாராட்டுகின்றேன்.

நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் நிவாரண சேவைகளில் ஈடுபட்டு உலகத்திற்கே மனிதாபிமானத்தின் முன்மாதிரியாகத் திகழ்கின்ற எமது பாதுகாப்புப் படையினரின் பணிகளும் பாராட்டுக்குரியவை” என்றார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யு.டி.பஸ்நாயக்க ஆகியோரும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
00
03