செய்திகள்

தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட மாணவர்கள் கௌரவிப்பு

அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கௌரவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது நேற்றைய தினம் இவ்வீரர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களான நந்தகுமார். டிலுக்சன் மற்றும் வவுனியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வர்ணகுணராம் ஆகிய சாதனை மாணவர்களுக்கு செயலாளர் நாயகம் அவர்கள் பணப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.

அத்துடன் குறித்த மாணவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட அதேவேளை, குறித்த விளையாட்டை மென்மேலும் வளர்த்தெடுப்பதற்கு தேவையான தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.