செய்திகள்

தேசிய லொத்தர் சபையின் 375 மில்லியன் ரூபா மஹிந்தவின் பிரச்சாரப் பணிக்கு: சபைத் தலைவர்

தேசிய லொத்தர் சபையை பிரபல்யப்படுத்துவதற்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 375 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரசாரப் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக லொத்தர் சபையின் தலைவர் ஷாமலா பெரேரா தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையான மூன்று மாதங்களில் தேவைக்கதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் காணொளி ஒன்றை நாடு முழுதும் காண்பிப்பதற்காக தேசிய லொத்தர் சபையிடமிருந்து 67 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் ஷாமலா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளிலும் முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் 150 பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் பல இசை நிகழ்ச்சிகள் மற்றும் கால்டன் வலையமைப்பினால் நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டி என்பவற்றுக்கு லொத்தர் சபையின் பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.