செய்திகள்

தேசிய விருதை வென்ற பின் தனுஷ், ரித்திகா சிங் கூறிய உருக்கமான கருத்து

63வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார்.

இதுமட்டுமின்றி சிறந்த துணை நடிகராக சமுத்திரக்கனி, சிறந்த எடிட்டர் கிஷோர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுக்குறித்து தனுஷ் கூறுகையில் ‘ஒரு சில படைப்புக்கள் எடுக்கும் போதே இப்படம் மிக முக்கிய இடத்திற்கு செல்லும் என்று தெரியும், அப்படி ஒரு படைப்பு தான் விசாரணை.

3 தேசிய விருதுகள் வாங்க காரணமாக இருந்த வெற்றிமாறன்அவர்களுக்கு நன்றி’ என கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி ஸ்பெஷல் ஜுரி விருதை வென்றி ரித்திகா சிங் ‘இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை, இவ்விருது வாங்க காரணமாக இருந்த சுதா, ராஜ் குமார் ஹிரானி அவர்களுக்கு நன்றி, மேலும், இதை ஒரு ஆஸ்கர் போல் எண்ணுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

N5