செய்திகள்

தேசிய வைத்தியசாலைக்கு என்னை மாற்றுங்கள்: பசில் கோரிக்கை

பொருளாதார அபிவிருத்தியமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே மாதம் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட பசில் ராஜபக்ஷ, நேற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு அதிகாரசபையை அவர் கோரியுள்ளார். எனினும், சிறைச்சாலை வைத்தியர், பசிலை சோதனை செய்த பின்னரே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.