செய்திகள்

தேடப்படும் உதயங்கவை தாய்வானில் இரகசியமாக சந்தித்த மஹிந்த

முன்னாள் உக்ரேன் தூதுவர் உதயங்க வீரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவை தாய்வானில் சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸின் ஒத்துழைப்பை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தூதுவராக இருந்து ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட உதயங்க வீரதுங்க குறித்து நிதி மோசடி பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. நிதி மோசடி பிரிவு அவரை தேடி உக்ரைனுக்கு சென்று வந்தது. ஆனால் அவர் அங்கிருக்கவில்லை. இவர் எவ்வாறு தாய்லாந்து வந்துள்ளார்? இவரின் பேஸ்புக் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தன்னை கைது செய்யுமளவிற்கு தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறி வருகிறார்.

இவர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டது. இவரின் ராஜதந்திர கடவுச்சீட்டை 2020 வரை பயன்படுத்த முடியும். அதனை அரசு ரத்து செய்துள்ள போதும் அது குறித்து சகல நாடுகளுக்கும் அறிவிக்கப்படவில்லை. இவரை கைது செய்ய சர்வதேச பொலிஸின் உதவியை நாட உத்தேசிக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.