செய்திகள்

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வைகோ தீவிர முயற்சி

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்து வரும் வேளையில் மக்கள் நலக் கூட்டணியும் அக்கட்சியை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இன்று விஜயகாந்தை நேரில் சந்தித்து வைகோ பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துவிட்ட போதிலும் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தேமுதிகவை தங்கள் பக்க இழுப்பதற்காக மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் ஏற்கனவே விஜயகாந்தை இரண்டு முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தநிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை இன்று சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு தே.மு.தி.க. கட்சி அலுவலகத்திலோ, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திலோ நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

N5