செய்திகள்

தேமுதிக அதிருப்தியாளர்கள் பற்றி வைகோ, திருமாவளவன் முரண்பட்ட கருத்து

தேமுதிக அதிருப்தியாளர்கள் குறித்து வைகோவும், திருமாவளவனும் முரண்பட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

தேமுதிகவை திமுக திட்டமிட்டு உடைப்பதாக மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அவ்வாறு தாம் நினைக்கவில்லை என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இருவரும் அளித்த முரண்பட்ட கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தேமுதிக கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்த சந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சேகர், பார்த்திபன் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்தது தற்கொலைக்கு சமமானது என்று சந்திரக் குமார் தெரிவித்தார்.

N5