செய்திகள்

தேயிலைக் கொழுந்து பறிப்பதில் கின்னஸ் சாதனை முயற்சி !

தேயிலை கொழுந்து பறிப்பதில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க இலங்கை தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுலா சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், சிலோன் டீ இணைந்து ஆசிய பசுபிக் உள் பயண பங்காளிகள் மாநாட்டின் போது இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தவுள்ளன. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் மாநாடு இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது. ஆயிரம் தொழிலாளர்களை ஒரு இடத்திற்கு அழைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகளவு கொழுந்தைப் பறித்து கின்னஸ் சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேயிலை கொழுந்து பறிப்பதில் கின்னஸ் சாதனை முயற்சி என்ற இந்த நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் இலங்கை தேயிலையின் தரத்தை உலகிற்கு எடுத்துரைக்கவும் இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.