தேயிலை கொழுந்து நிலுவையில் அபகரிப்பு
கொட்டகலை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்டபட்ட கிரிஸ்ட்லாஸ் பார்ம்,டெரிக் கிளையர், ட்றேடன் ஆகியதோட்டங்களுக்கு விஜயம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரேலியா மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் தோட்ட முகாமையளயர்களுக்குகிடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று இடம் பெற்றது.
இதன் போது இத்தோட்டங்களில் நாளாந்தத் தேயிலை நிலுவையின்போது நாள் ஒன்றுக்கு 4கிலோ தொடக்கம் 9 கிலோ வரை தேயிலை கொழுந்து ஒரு தொழிலாளியிடம் கழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி நாள் ஒன்றுக்கு ஒரு தொழிலாளிக்கு 1கிலோ வீதம் கழிக்கப்படலாம் என வழியுருத்தியதோடு இம்முறைனால் ஒரு வருட காலமாக கழிக்கப்பட்ட தேயிலை கொளுந்துக்கான தொகையினைஇம்மாத சம்பளத்தினத்தன்று தொழிலாளர்களுக்கு பெற்றுகொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன்முலம் ஒரு தொழிலாளி குறைந்தது மாததிற்கு ரூபா 4000 வீதம் வருடத்திற்கு ரூபா 48000 வரை தோட்டநிறுவாகத்திடமிருந்து பெற்று கொள்ள வேண்டியமை கண்டறியப்பட்டது.
இக்க கலந்துரையாடலில் தலைவர் முத்து சிவலிங்கம் மாகாணசபை உறுப்பினர்கள் ரமேஷ், சக்திவேல் உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்