செய்திகள்

தேரரின் சடலம் விஹாரையிலிருந்து மீட்பு

18 வயதான தேரரின் சடலம், விஹாரையின் களஞ்சிய சாலையிலிருந்து நேற்று 18ஆம் திகதி சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலி-எல, லந்தேவெல ஸ்ரீ போதிராஜராம விஹாரையின் களஞ்சியசாலையில் இருந்தே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் இருந்த இடத்தில் கடிதமொன்றும் இருந்துள்ளது. அந்த விஹாரையின் விஹாராதிபதிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், தான் பிழை செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பெரிய தேரரே நான் செல்கின்றேன். என்னை தேடவேண்டாம். அந்த தங்கை தொடர்பில் என்னுடைய இதயத்தில் எந்த எண்ணமும் இல்லை.  எனது கைகளினால் தவறேதும் இடம்பெற்றிருந்தால் அதற்காக மன்னிக்கவும்’ என்றும் அக்கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்-சிங்கள புதுவருட உற்சவத்துக்கு தேவையான மின்குமிழ்களை எடுப்பதற்கு வருகைதந்திருந்த கிராமத்தைச்சேர்ந்தவர்களே களஞ்சியசாலைக்குள் சடமொன்று இருப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவரது சடலம், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவம் தெரிவித்தனர்.