செய்திகள்

தேர்தலின் பின்னர் மலையக மக்களின் வீட்டு தேவைகள் பூர்த்தியாக்கப்படும்: அமைச்சர் பி.திகாம்பரம்

தேர்தலின் பின்னர் மலையக மக்களின் வீட்டு தேவைகள் பூர்த்தியாக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (05.05.2015) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் மலையகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி அவர்களை ஏமாற்றி வந்தனர்.

இதனால் மக்கள் அவர்களை புறக்கணித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது முழுமையான ஆதரவினையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் மலையக மக்களின் தனி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எமது அரசாங்கம் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.

மேலும் மண் சரிவினால் பாதிப்படைந்த மீரியாபெத்த மக்களுக்கான வீடுகள் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

_DSC0183 _DSC0207 _DSC0194