செய்திகள்

தேர்தலில் தனித்தா? கூட்டணியுடனா? : இ.தொ.கா இன்னும் தீர்மானமில்லை

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது வேறு ஏதேனும் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சிலவேளை சில மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்திலும் மற்றைய மாவட்டங்களில் கூட்டாக சேர்ந்தும் போட்டியிடுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.