செய்திகள்

தேர்தலில் பின் புதிய அரசியல் யாப்பு தயாரிப்போம்: விஜயதாஜ ராஸபக்ச தெரிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் அமைக்கப்படும் புதிய ஆட்சியில் புதிய அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

19வது திருத்தம் குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக அவர் கூறினார்.

உயர் நீதிமன்றம் சுதந்திரமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

19வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நியாயமான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.