செய்திகள்

தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த இன்னும் தீர்மானிக்கவில்லையாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இன்னும் தீர்மானிக்கவில்லையென  அவரின் ஊடக பேச்சாளரான  ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இது வரை தீர்மானிக்கவில்லை. இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில்  அவர் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஆனால் இது வரை மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு பிரதமர் வேட்பாளர் பதவி வேண்டும் , தேசிய பட்டியலில் இடம் வேண்டும் அல்லது வேட்பாளர் பட்டியலில் இடம்வேண்டும் என கேட்கவில்லை.
எவ்வாறாயினும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற தீர்மானத்தை மேற்கொண்டால் அது தொடர்பாக அவர் அறிவிப்பார். அவ்வேளையில் எந்த கட்சியில் என்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால் இது வரை அது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. என  ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.