செய்திகள்

தேர்தலில் யாருடன் போட்டியிடுவது என்று இன்னமும் முடிவில்லை : வே.இராதாகிருஷ்ணன்

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவுடன் கலந்துரையாடிய பின் தெரிவிக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டனில் அமைக்கப்பட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் புதிய அலுவலகத்தின் 28.06.2015 அன்று இடம்பெற்ற உத்தியோகபூர்வ திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆகியோர் அழைப்பு விடுத்திருக்கின்ற போதிலும் எதிர்வரும் 1ம் திகதி மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு கூட்டத்துடன் கலந்துரையாடிய பின் அதன் பிறகு உத்தியோகபூர்வ தீர்மானத்தை தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு இந்த பாராளுமன்ற தேர்தல் மலையக மக்களுக்கு மிக முக்கியமானது. இந்த தேர்தலில் தங்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்ணேஸ்வரன் இணைந்து தான் தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கு அவர் செயற்படவுள்ளார்.

அத்தோடு ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். முதன் முறையாக மலையக மக்கள் முன்னணியின் சார்பில் நான் தற்போது போட்டியிடவுள்ளேன்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த பாராளுமன்ற தேர்தலின் பின் இலங்கையில் உள்ள 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்பை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளார். இதில் ஜம்பதாயிரம் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்பை பெற்று கொடுப்பது தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் வே.இராதாகிருஷ்ணனும் பதுளை மாவட்டத்தில் அரவிந்தகுமாரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடதக்கது.