செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் மஹிந்த அணி : வேட்பாளர் தெரிவு குழுவை அமைக்க திட்டம்

பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி வேட்பாளர் தெரிவு குழுவொன்றை அமைப்பது தொடர்பாக அவர்கள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் அவரை வேறு அணி மூலம் களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மஹிந்த ஆதரவு பங்காளிக் கட்சிகள் அதற்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்கான தயார்படுத்தல்களையும் தற்போது மேற்கொண’டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மஹிந்தவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் களமிறங்க அனுமதிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.