செய்திகள்

தேர்தலுக்கு தேர்தல் திணைக்களம் தயார்: ஆளுநர் அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்­த­லுக்­கான அனைத்து செயற் ­பா­டு­களும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரி­வினர் போல் தேர்த லுக்கான தயார் நிலையில் இருப்­ப­தாக தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அர­சா­னது பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் ஒன்­றுக்குச் செல்லும் வர்த்­த­மானி அறி­வித்­தலை அறி­விக்கும் வரை தேர்தல் திணைக்­க­ளத்­தினால் எப்­போது தேர்தல் நடை­பெறும் என்றும் எந்த முறையில் நடை­பெறும் என்­பதையும் அறி­விக்க முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்தல் கள் செய­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். இதன் போது அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

“பொதுத் தேர்தல் ஒன்­றுக்­கான அனைத்துச் செயற்­பா­டு­களும் நாட­ளா­விய ரீதியில் எமது அதி­கா­ரி­க­ளினால் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. இத­னி­டையே வரு­டாந்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற வாக்­காளர் கணக்­கெ­டுப்பு அல்­லது தேருநர் இடாப்பு மீளாய்வு இம்­மாதம் 15 ஆம் திக­தி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டில் வதி­வொன்றை கொண்­டுள்ள அனைத்து வீடு­க­ளுக்கும் வாக்­காளர் கணக்­கெ­டுப்பு படி­வங்கள் எதிர்­வரும் ஜுன் மாதம் 21 ஆம் திக­திக்கு முன்னர் பகிர்ந்­த­ளிப்­ப­தற்கு கிராம அலு­வ­லர்கள், விசேட கணக்­கெ­டுப்­பா­ளர்கள் ஊடாக விநியோகிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­து. பூர்த்தி செய்த விண்­ணப்­பங்­களை எதிர்­வரும் ஜுலை 31 திக­திக்கு முன்னர் நாடா­ள­விய ரீதியில் உள்ள கணக்­கெ­டுக்கும் அலு­வ­ளர்­க­ளுக்கு சமர்­ப்பிக்க வேண்டும்.

எதிர்­வரும் பொது தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்­க­ள­மா­னது தீய­ணைக்கும் படைப் பிரி­வினர் போல தமது செயற்­பா­டு­க­ளுக்கு தயார் நிலை­யி­லேயே உள்­ள­தோடு ஒரு சில செயற்­பா­டு­க­ளுக்­காக இன்னும் 50 அல்­லது 60 நாட்கள் தேவை­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலையில் மக்கள் மத்­தி­யிலும் அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­க­ளாக அனை­வ­ர் மத்தியிலும் தேர்தல் எப்­போது நடை­பெறும் எந்த முறையில் நடை­பெறும் என்ற கேள்வி எழுந்­துள்­ள­து. இது தொடர்பில் தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு பெருமளவிலான தொலை பேசி அழைப்­பு­களும் கடி­தங்­களும் வந்த வண்ணம் இருக்­கின்­றன.

தேர்தல் முறை சட்டம் மற்றும் வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் அடி­ப­டையில் இந்த பாரா­ளு­மன்­றத்தின் ஆயுட்­கா­ல­மா­னது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் அர­சா­னது பாரா­ளு­மன்­றதை கலைத்து தேர்தல் வேட்­பு­மனு திகதி, தேர்தல் திகதி என்­ப­வற்றை வர்த்­த­மா­னி­யு­னு­டாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வரை தேர்தல் திணைக்­க­ளத்­திற்கோ அல்­லது தேர்தல்கள் ஆணை­யாளர் என்ற ரீதியில் எனக்கோ எத­னையும் குறிப்­பிட முடி­யாது.

தேர்தல் முறை சட்­டத்தின் 10 ஆவது சரத்தில் இது தொடர்­பி­லான அனைத்து விட­யங்­களும் தெளிவாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. தேர்தல் திகதி அறி­விக்­காமை மற்றும் தேர்தல் காலப்­ப­கு­தியை நீடிக்­கின்­றமை தொடர்பில் எனக்கோ தேர்தல் திணைக்­க­ளத்­திற்கோ எவ்­வித சம்­பந்­தமும் இல்லை.

ஆட்­சியில் இருக்கும் அர­சா­னது எப்­போது பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்தல் ஒன்­றுக்கு செல்­வ­தற்­கான வாத்­த­மானி அறி­வித்­தலை வௌியி­டு­கின்­றதோ அதி­லேயே வேட்பு மனு­தாக்கள் செய்­யப்­படும் தினம், மற்றும் தேர்தல் திகதி என்­பன உள்­ள­டக்­க­படும். அதன் பின்­னரே தேர்தல்கள் செய­லகம் தேர்தல் திக­தியின் அடி­ப­டையில் தேர்தலை நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான முறையில் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­களை முன்­னெக்கும். இதனை அனை­வரும் புறிந்து கொள்­வது அவ­சி­ய­மா­னது.

இருந்­த­போ­திலும் இம்­முறை தேர்தல்தினத்தை சனிக்­கி­ழமை அன்று நடத்­து­வ­தற்­கான யோச­னையை முன்­வைத்­துள்ளோம். காரணம் மக்­க­ளுக்கு ஏற்­ற­வா­ரன விடு­மு­றையை பெற்­றக்­கொள்ள இது சந்­தாப்­ப­மாக அமையும்.