செய்திகள்

தேர்தலுக்கு முன்னர் 10 , 15 எம்.பிக்களை சிறைக்குள் தள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது: விமல் வீரவன்ச

தேர்தலுக்கு முன்னர் 10 , 15 எம்.பிக்களை சிறைக்குள் தள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்காகவே நிதி மோசடி விசாரணை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பிரிவு அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதெனவும். இதன்படி தேர்தலுக்கு முன்னர் 10 , 15 எம்.பிக்களை சிறைக்குள் தள்ளும் முயற்சிகளே இடம்பெற்று வருவதாகவும் ஆனால் அதற்கு முன்னர் மத்திய வங்கி ஆளுனரை அந்த பிரிவுக்கு அழைக்க வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.