செய்திகள்

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்துவோம் : ஆசிரியர் சங்கம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையை கருத்திற் கொண்டு பொதுத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமெனவும் இல்லையேல் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 17ம் திகதி நடத்தப்படவுள்ளமை அந்த காலப்பகுதியில் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. உயர்தரப் பரீட்சை மூன்று இலட்சம் மாணவர்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை . இந்த விடயத்தை கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.
வேண்டுமென்றால் செப்டம்பர் 2ம் திகதி தேர்தலை நடத்தலாம். இவ்வாறு தேர்தலை ஒத்தி வைக்க நடவடிக்கையெடுக்காவிட்டால் போராட்டங்களை நடத்த நேரிடும். என அவர் தெரிவித்துள்ளார்.