செய்திகள்

தேர்தல் அறிவிக்கபட்ட பின்னரே மஹிந்த மேடைகளில் ஏறுவார்

 தேர்தல் அறிவிக்கப்படும் வரை எந்தவொரு அரசியல் கூட்ட மேடையிலும் ஏறாது இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்குமாறு கோரி கூட்டங்கள் நடைபெறுகின்ற போதும் அவர் அந்த கூட்டங்களுக்கு செல்லாது பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் தனக்கு ஆதரவாக நடைபெறும் கூட்ட மேடைகளில் ஏறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.