செய்திகள்

தேர்தல் எப்போது? தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை விசேட கலந்துரையாடல்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளைய தினம் கூடவுள்ளது.
இந்த குழு கூடிய பின்னர் சுகாதார சேவை பணிப்பாளர் , இராணுவ தளபதி , பொது நிர்வாக அமைச்சு செயலாளர் , சுகாதார அமைச்சு செயலாளர் , தபால் மா அதிபர் , பொலிஸ் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
நாளை மாலை இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)