செய்திகள்

தேர்தல் ஏப்ரல் 25 நடக்குமா?: கட்சி செயலாளர்களை சந்திக்க ஆணைக்குழு முடிவு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

-(3)