செய்திகள்

தேர்தல் சீர்திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவையில் நேற்று இந்த திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு நீண்ட நேர ஆலோசனைகளுக்குப் பின்னர் அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

19 வது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தல் சீர்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாகவும் தெரிகின்றது.