செய்திகள்

தேர்தல் திருத்தத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை 255 வரை அதிகரிக்கப்பட வேண்டும் : ஐ.ம.சு.கூ ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்க தீர்மானம்

புதிய தேர்தல் திருத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 255 வரை உயர்த்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் யோசனையொன்றை முன் வைக்கவுள்ளது.
இன்று இரவு 20வது திருத்தம் தொடர்பாக தீர்மானமெடுக்கும் வகையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமது யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஐக்கிய மக்கள் கூதந்திர கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி நேற்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியுள்ள ஐ.ம.சு.கூ பங்காளிக்கட்சி பிரதிநிதிகள் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள 225 உறுப்பினர் என்ற எண்ணிக்கையை ஏற்றுக்கொள்ள முடியானெவும் இதனால் உறுப்பினர் எண்ணிக்கையை 255 வரை அதிகரிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்த தீர்மானித்து அது தொடர்பாக இன்று எழுத்து மூலம் அவரிடம் யோசனையை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதற்கிணங்க தொகுதி மற்றும் விகிதாசர முறையில் 196 முதல் 204 வரையான உறுப்பினர்களும் தேசிய பட்டியல் ரீதியில் 51 வரையான எம்.பிக்களும் தெரிவாகும் வகையில் புதிய தேர்தல் திருத்தத்தில் எம்.பிக்களின் எண்ணிக்கை அமைய வேண்டுமென ஐ.ம.சு.கூ தீர்மானித்துள்ளது.