செய்திகள்

தேர்தல் திருத்தம் தொடர்பான ஶ்ரீ .ல.சு.கவின் யோசனை சிறுபான்மை பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பாக அமையாது : சுசில்

தேர்தல் திருத்தம்  தொடர்பாக  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்திருக்கும் யோசனைகள் மூலம் சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 கொழும்பில் அகில இலங்கை முஸ்லிம்  லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகர் தின நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுசில் பிரேமஜயந்த  இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருத்தமான 20வது திருத்தம் தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தனது யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது இந்த யோசனை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.