செய்திகள்

தேர்தல் திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பெதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வராது : ராஜித

தேர்தல் முறை திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பொதுத்தேர்தல் நடத்தப்படாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரவித்துள்ளளார்.
தேர்தல் முறை  திருத்தம் நிறைவேற்றப்படும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிப்படாது. நாம் முன்வைத்த சகல உறுதிமொழிகளையும் முடிந்த வரை நிறைவேற்ற நடவடிக்கையெடுப்போம். இதன்படி தேர்தல் திருத்தத்தை நிறைவேற்றுவோம். இந்நிலையில் எந்த முறையில் அடுத்த பொதுத் தேர்தல்  நடத்தப்படுமென அதன்பின்னரே தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.