செய்திகள்

தேர்தல் திருத்த யோசனை நேற்று அமைச்சரவையில் நிறைவேற்றப்படவில்லை! ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது

புதிய தேர்தல் முறை திருத்தத்திற்கான அனுமதி பெற்றுக்கொள்வதனை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கு அமச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஆராய்ந்து புதிய திருத்தத்துக்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கென ஜனாதிபதியின் ஆலோசனையின்படி அமைச்சரவையின் உபகுழுவொன்றும் அதன்போது நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவில் சரத் அமுனுகம, லக்‌ஷ்மன கிரியெல்ல, சம்பிக்க ரணவக்க, எஸ.பி.திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் திகாம்பரம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அரசாங்கம் வெளியிடவுள்ளது.