செய்திகள்

தேர்தல் நடைபெறுவதை தடுக்க முடியாது! அனுரகுமார திசாநாயக

எதிர்வரும் மதங்களில் தேர்தல் நடைபெறுவதை தடுக்க முடியாது. குறித்த தேர்தல் எந்த முறையில் நடைபெறும் என்பதை அரசாங்கமே முடிவு செய்யும் என ஜேவிபியின் தலைவர் அனுர குமார திசாநாயக தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய நிறைவேற்று சபையில் தாம் அங்கம் வகித்து நூறுநாளில் செய்வதாக கூறியதை அவதானிப்பதுடன் அழுத்தம் கொடுப்போம் என்றார்.

இந்த நூறு நாட்களில் பெரிய மாற்றத்தையோ, மக்கள் நலன் கருதியோ எதனையும் எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.