செய்திகள்

தேர்தல் நம்பகத்தன்மையானதாகவும் வெளிப்படையானதாகவும்இருக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

ஜனாதிபதி தேர்தல் அமைதியானதாகவும், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படையானதாகவும் அமையவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகொள் விடுத்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்குழுவின தலைவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகத்தன்மை மிகுந்த தேர்தலுக்கு அமைதியான சூழல் அவசியம் என்ற தனது நீண்ட கால நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுபடுத்த விரும்புகின்றது.
அச்சமற்ற சூழலில் தங்கள் தவைவரை தெரிவுசெய்வதற்கு இலங்கை மக்கள் அனுமதிக்கப்படவேண்டும். ஜனநாய பாரம்பரியங்களை பின்பற்றுவதில் சகல கட்சிகளுக்கும் பங்குள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.