செய்திகள்

தேர்தல் முடிவடையும் வரை வடகிழக்கில் படையினரைமுகாம்களுக்குள் முடக்கவேண்டும்

தேர்தல் முடிவடையும் வரை இராணுவம் முகாம்களுக்கு முடக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூர்ய தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகொள் ஒன்றை விடுத்துள்ளார்.
வடபகுதிக்கான விஜயத்தின்போது இராணுவத்தினரும் ஆயுத குழுக்களும் சுதந்திரமாக நடமாடுவதனால் தமிழ்மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை மற்றும் அச்சுறுத்தப்படுதல் குறித்த உணர்வு காணப்படுவதை தான் உணர்ந்ததாகவும், அவர்தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் அந்த மக்கள் கடந்த காலங்களில் சந்தித்த மிகப்பயங்கரமான அனுபவங்கள் அவர்களை நிம்மதியாக உணரவிடவில்லை, வடமாகாண சபைதேர்தலின் போது வாக்காளர்களை அச்சுறுத்தி மிரடடுவதற்காக இராணுவத்தையும், துணைப்படையினரையும் ராஜபக்ச அரசாங்கம் எப்படி பயன்படுத்தியது என்பது வெளிப்படையான விடயம்,
இராணுவத்தினர் மற்றும் ஆயுத குழுக்கள் மக்களை மிரட்டுவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையாளர் உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
தமிழ்மக்கள் நம்பிக்கையுடனும் அச்சமின்றியும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்தற்கு இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படுதல் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.