செய்திகள்

தேர்தல் முறையை மாற்றாமல் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க முடியாது: யாப்பா

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை மாத்திரம் குறைப்பதானால், அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று, இலங்கை மன்றக் கல்லூரியில்  நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

இதன்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் தேர்தல் முறையை மாற்றியமைத்தல் ஆகிய திருத்தங்களை ஒரே தடவையில் கொண்டுவரப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.