செய்திகள்

தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைப்பு: ஜனாதிபதி உறுதி

தற்போதைய விகிதாசாரப் பிரதிநித்துவ தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்த பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உறுதியளித்திருக்கின்றார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தல் உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.