செய்திகள்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அடுத்த வாரத்தில் முடிவு: ரணில்

தேர்தல் முறைமை தொடர்பில் முக்­கிய தீர்­மா­னங்கள் எடுத்­துள்ளோம். அடுத்த வார­ம­ளவில் கூட­வுள்ள கட்சி தலை­மைக்­குழு கூட்­டத்தில் இது குறித்து இணக்கம் காண்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். இதேவேளை தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் ஊழல் மோச­டிக்­கா­ரர்­களே உள்­ளனர். இதனை நாம் ஏற்­கிறோம். இதனை மாற்றி அமைத்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற பெப்ரல் அமைப்பின் மார்ச் 12 பிர­க­டனம் வெளி­யீட்டு நிகழ்வின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் கூறியதாவது:

“மக்கள் பிரதிநிதித்­து­வத்தின் தரம் குறித்து ஆராய்­வ­தற்கு முன்பு பாரா­ளு­மன்றம் உள்­ளிட்ட மக்கள் பிர­தி­நி­தித்­துவ நிறு­வ­னங்­களின் தரமும் அந்­தஸ்தும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். தற்­போது பாரா­ளு­மன்­றத்­திற்கு உரிய அந்­தஸ்து இல்லை. அதனை இல்­லாமல் செய்­துள்­ளனர். அத்­தோடு முன்­னைய காலங்­களை போன்று பாரா­ளு­மன்றில் முக்­கிய அம்­சங்கள் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­வ­தில்லை. மூன்று நாட்­க­ளுக்கு மேல் செய்ய வேண்­டிய விவா­தங்கள் ஒரு நாளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றிற்கு பொறுப்பு கூடி­ய­வ­ராக இல்லை. இது மிகவும் ஆபத்­தா­னது. பாரா­ளு­மன்ற செயற்­பா­டுகள் அனைத்தும் ஜனா­தி­ப­திக்கு கீழ் இடம்­பெ­று­கின்­றன. எனவே நாட்டின் அனைத்து துறை சார்ந்த அதி­கா­ரங்­களும் பாரா­ளு­மன்­றத்­தி­டமே காணப்­படல் வேண்டும். மேலும் அனைத்து துறை சார்ந்த தீர்­மா­னங்­களையும் பாரா­ளு­மன்றம் எடுக்க வேண்டும். மேலும் பாரா­ளு­மன்றம் மக்­க­ளுக்கு பொறுப்பு கூடிய நிலை­மையை தோற்­று­விக்க வேண்டும்.

எனினும் தற்­போது பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வோரின் தரம் குறைந்­துள்­ளது. ஊழல் மோச­டி­களில் சம்­பந்­தப்­பட்­டோர்­க­ளா­கவும் பொய்­யர்­க­ளா­கவும் உள்­ளனர். தற்­போது பாரா­ளு­மன்றில் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை. இதனை நாம் ஏற்று கொள்­கிறோம்.

இதற்­க­மைய இதனை மாற்றி அமைக்க வேண்டும். ஜனா­தி­பதி முறையை நீக்கி பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்த வேண்டும். மேற்­படி நாட்டில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த நல்­லாட்சி பய­ணத்­திற்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொதுச் செய­லா­ள­ரா­க­வி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தலை­மை­பீ­டத்தில் அமர வைத்தோம். இந்­நி­லையில் தற்­போது 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு சுதந்­திர கட்சி ஆத­ரவு வழங்க முன்­வந்­துள்­ளது.

ஜனா­தி­பதி முறைமை உள்­ளிட்ட அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க உள்ளோம். எனினும் தேர்தல் முறைமை குறித்து இந்த வாரம் கட்சி தலைவர் குழு கூட்டத்தில் விசேட முக்கிய தீர்மானம் எட்டப்பட்டன. எனினும் இது தொடர்பில் அடுத்த வாரமளவில் இக்குழு கூட்டத்தில் இணக்கம் ஏற்படுத்த உள்ளோம். எனவே நல்லாட்சி பயணத்தின் மீது தனக்கு எந்த அச்சமோ, சந்தேகமோ இல்லை என்றார்.