செய்திகள்

தேர்வில் பெயிலா? நடிகை லட்சுமி மேனன் பதில்

பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலாகி விட்டதாக நேற்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை லட்சுமி மேனன் மறுத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த லட்சுமிமேனன், கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதியிருந்தார்.

சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் பெயிலாகிவிட்டதாக செய்திகள் வந்தன.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள லட்சுமி மேனன், நான் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. சிபிஎஸ்இயில் படித்தேன். இன்னும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 20 ஆம் தேதிக்கு மேல் தான் வெளியாகும். எனவே நான் பெயிலாகி விட்டதாக வந்த செய்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.