செய்திகள்

தேர்வுக் குழு தலைமை பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகினார்.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தலைமை பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக சனத் ஜயசூரிய அறிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
தான் பதவி விலகினாலும் கடந்த காலங்களை போன்று இலங்கை கிரிக்கெட் அணிக்கான தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவேன் என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.