செய்திகள்

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற வைகோ: தடுத்து நிறுதியவர்களிடம் வாக்குவாதம்

கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த வைகோவை ஒரு தரப்பினர் தடுத்தனர். அப்போது அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அங்குள்ள திட்டங்குளம் கிராமத்தில் வைகோ பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.

அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வைகோ வேனில் இருந்து இறங்கினார். அப்போது தேவர் சிலைக்கு வைகோ மாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் வைகோவை தடுத்தனர்.

இதனால் அவர் மீண்டும் வேனுக்கு சென்றார். அங்கிருந்து பேசிய வைகோ, தேவர் சிலைக்கு மாலை அணிவிக்காமல், தான் இங்கிருந்து செல்லமாட்டேன் என வைகோ தெரிவித்தார்.

தான் மாலை அணிவிக்க போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் வைகோ ஆவேசம் அடைந்தார்.
N5