செய்திகள்

தேவைப்பட்டால் மரணதண்டனை நீதியமைச்சர் கருத்து

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்பட்டால் மரணதண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில்பௌத்த மகாநாயக்கர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில்அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,தேவைப்பட்டால் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவோம்,
நாட்டில் சட்ட கல்வி என்பது பாரிய நெருக்கடிக்குள் உள்ளது,சட்ட கல்லூரி பரீட்சைக்காக தோற்றியவர்களில் 80 வீதமானவர்கள் தேர்ச்சிபெறவில்லை.நீதிபதிகள் அச்சமின்றி செயற்படுவதற்கான சூழல் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்