செய்திகள்

‘தே.மு.தி.க. குறித்து நம்பிக்கை இழக்கவில்லை’

தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 65 மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, சட்டமன்றத் தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அக்கட்சி குறித்த நம்பிக்கையை தான் இழக்கவில்லை எனக் கருணாநிதி கூறினார்.

தற்போதுள்ள சூழலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அறிவிப்பது இயலாது என்றும் தே.மு.தி.க. கூட்டணி எப்போது முடிவாகுமெனக் கூற முடியாது என்றும் கருணாநிதி கூறினார்.

n10