செய்திகள்

தொடரும் குளவித் தாக்குதல்கள்! தோட்ட நிர்வாகத்துக்கெதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போட்ரி தோடத்தில் குளவி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக இழக்காகி வருவதால் இதனை தோட்ட நிர்வாகம் குளவி கூடுகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை என கோரி 01.06.2015 அன்று பிற்பனல் 100ற்கும் மேற்பட்ட போட்ரி தோட்ட தொழிலாளிகள் தோட்டத்தில் 3 மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவிக்கையில்,

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் இவ்வாறான தாக்குதல் தொடர்ச்சியாக இடம்பெறுவதால் குளவி கூடுகளை அப்புறப்படுத்தி தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறிய போதிலும் தோட்ட நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கோரி இவ்வாறு ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டதாக இவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக இத் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி 100ற்கும் மேற்பட்டவர்கள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த போட்ரி தோட்ட அதிகாரி எஸ்.காவிந்த ஆராய்ச்சி தொழிலாளிகளுடன் கலந்துரையாடி தோட்ட தொழிலாளிகளுக்கு ஆபத்தான நிலையில் காணப்படும் அனைத்து குளவி கூடுகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் 01.06.2015 அன்று வேலைக்க செல்லாமல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளிகளுக்கு நாளுக்கான ஊதியத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்த பின் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது நோர்வூட் பொலிஸாரும் உடனிருந்தனர்.

குறித்த இத்தோட்டத்தில் 01.06.2015 அன்று காலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியதில் 15 பேர் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா, புஸ்ஸலாவ, டயகம, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நானுஓயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, டிக்கோயா, அட்டன், கொட்டகலை, பத்தனை போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக குளவி தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை வெகுவிரைவில் எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.

DSC09164

DSC09163

DSC09159

DSC09156

DSC09152

DSC09142

DSC09138

DSC09136

DSC09132

DSC09131

DSC09128

DSC09126