செய்திகள்

தொடர்கிறது தேடுதல் நடவடிக்கை

பிரான்சில் கடந்த சில தினங்களில் 17பேரை கொலைசெய்த பயங்கரவாதிகளின் சகாக்களை தேடி பிரான்ஸ் பொலிஸார் பாரிய தேடுதல் நடலடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் ஹயாட் பௌமெடின் என்ற பெண்ணும் உள்ளதாகவும், இவர் பாரிசில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் சகாவெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரிடம் ஆயுதங்கள் உள்ளன இவர் ஆபத்தானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவளை அடுத்த சில வாரங்களுக்கு பிரான்ஸ் தொடர்ந்தும் உஸார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.