செய்திகள்

தொடர்ந்தும் காணிகள் அபகரிக்கப்படுகின்றது: மைத்திரியிடம் சுட்டிக்காட்டிய விக்கி

வடக்கில் குறிப்பாக வலிகாமம் பகுதியில் தொடர்ந்தும் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகைதந்த ஜனாதிபதியுடன் தனியாகப் பேசிய போதே இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் தெரிவித்த விடயங்களை கவனமாக அவதானித்த ஜனாதிபதி, என்ன பிரச்சினையென்றாலும் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறு தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தைக்கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.