செய்திகள்

மனித நாகரிகத்தின் பிறப்பிடம் நிர்மூலம் : ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் (படங்கள், வீடியோ இணைப்பு )

ஈராக்கின் மொசூல் நகரத்தின் மத்திய அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான  வருடங்கள் பழைமை வாய்ந்த அரும்பெரும் விலை மதிப்பற்ற சிலைகளையும் சிற்பங்களையும் ஐ. எஸ் .ஐ எஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் நிர்மூலம் செய்திருக்கின்றமை உலகம் முழுவதிலும் கடும் சினத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சிலைகளையும் சிற்பங்களையும் பாரிய சுத்தியல்கள் மற்றும் துளையிடும் கருவிகள் கொண்டு அடித்து உடைத்து தாங்கள் நிர்மூலம் செய்யும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ள ஐ.எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகள் அதனை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டனர்.

இந்த சிலைகள் உருவவழிபாட்டை தூண்டுவதனாலும் இறைவனின் ஆணைப்படியே அவற்றை நிர்மூலம் செய்வதாகவும் இந்த கானொளியில் அவற்றை நிர்மூலம் செய்யும் ஒரு தீவிரவாதி கூறுவதும் தாடி வளர்த்த தீவிரவாதிகள் அரிய சிலைகளை கீழே விழுத்தி மூர்க்கத்தனமாக அவற்றை உடைப்பதுமான காட்சிகளும் பதியப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நிர்மூலம் செய்யப்படும் சிற்பங்களில் ஒன்று கிறிஸ்துவுக்கு முன்னர் 9ஆம் நூற்றாண்டு தைகிரிஸ் நதிக்கரையோர மெசொபத்தேமிய இராச்சிய நாகரிக கால இறை வழிபாட்டுக்குரிய ‘இறக்கை கொண்ட காளை’ஆகும்.

அரிய பல ஓவியங்களை திருடி கருப்பு சந்தையில் தீவிரவாதிகள் பெருமளவு பணத்துக்கு விற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மொசூல் பொது நூலகத்தை குண்டு வைத்து இந்த தீவிரவாதிகள் தகர்த்து விட்டதாகவும் சுமார் 10,000 ற்கும் அதிகமான புத்தகங்களும் சுமார் 700 க்கும் அதிகமான அறிய சுவடிகளும் தீயில் எரிந்துகொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து பலரும் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர் . ‘மனித நாகரிகத்தின் பிறப்பிடம் நிர்மூலமாக்கப்படுகிறது’ பலர் இந்த சம்பவத்தை விபரித்திருக்கிறார்கள்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=JEYX_CbwAD8″ width=”500″ height=”300″]

2 3 4