செய்திகள்

தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்ப தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகைகளிடம் பணம் , பாலியல் லஞ்சம் பெற்றவர்களுக்கு சிக்கல்

நாட்டில் தயாரிக்கபட்ட தொலைக்காட்சி நாடகங்களை அலைவரிசைகளில் ஒளிபரப்புவதற்காக  கடந்த காலங்களில் தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர்களிடம் இலட்சக் கணக்கில் இலஞ்சம் பெற்றுக்கொண்ட மற்றும் புதிய நடிகைகளிடம் பாலியல் லஞ்சம் கேட்ட குழுக்கள் தொடர்பாக தற்போது பொலிஸ் விசாரணை பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்துள்ள தகவலின்படி இவ்வாறாக இலஞ்சம் வழங்கிய மேலும் சில தயரிப்பாளர்கள் மற்றும் நடிகைகள் எதிர்வரும் தினங்களில் சத்தியக் கடதாசி ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடக தயாரிப்பாளர்களும் மற்றும் நடிகைகளும் குறித்த நபர்களுக்கு இலஞ்சம் கொடுக்க இணங்கியதால் அதற்கு முடியாது என தர்பினர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.